28/10/2024
இறக்காமம் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதிஉதவி
உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவதற்கும் இறக்காமம் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்குமாக இறக்காமம் பிரதேச சபைக்கு சுமார் 32 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் கிரேன்டர் இயந்திரம் நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.ஜ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் பிரதேச சபை முன்றலில் வைத்து இந்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக உள்ளூராட்சி அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களான எம். கே. எம். முஹம்மத், எல்.எம்.இர்பான்,எஸ்.சிஹாபூதீன் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி. மௌலானா நிறுவன முகாமையாளர் ஆர் தர்மசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்